Home -
மனிதர்கள்

சந்தோஷ் எனும் கலைஞன்

ஓவியர் சந்தோஷ் நாராயணனைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவரை முதலில் சந்தித்தபோது அவரிடம் பேசவில்லை. ஏனென்றால் அவர்தான் சந்தோஷ் என்று தெரியாது. தஞ்சை செங்கிப்பட்டி செம்மை வனத்தில் சுவரோவியம் வரைந்துக் கொண்டிருந்தார். அவர் வரைவதை வேடிக்கைப் பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.
 
Continue Reading →about சந்தோஷ் எனும் கலைஞன்

அரசியல்

காட்டுத் தீயல்ல – பல்லுயிரியப் படுகொலை

காடோடி நாவலில் வரும் ‘போர்னியோ’ காட்டின் கலிமந்தான் பகுதி அமேசான் போலவே பற்றி எரிகிறது. வழக்கம் போலவே ‘சைம் டெர்பி’ எனும் செம்பனை எண்ணெய் பொருட்கள் நிறுவனத்தின் மீது அய்யம் எழுந்துள்ளது. இடம் மாறினாலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நோக்கம் மட்டும் மாறுவதில்லை. நாஜியிசம், ஃபாசிசம் போல பிரேசில் அதிபரின் பெயரால் ‘போல்சோனரோவிசம்’ என்கிற புதிய கொள்கைத் தோன்றியுள்ளது. இது இந்திய ஒன்றியத்திலும் வேறு வகையில் பரவி வருகிறது.

இனப்படுகொலையோடு பல்லுயிரியப் படுகொலைகளையும் நிகழ்த்தும் இப்போக்கு குறித்து அண்மையில் ஆனந்த விகடனில் எழுதிய இக்கட்டுரையை இங்கு பகிர்ந்துக் கொள்கிறேன். அமேசான் ஆனாலும் போர்னியோ ஆனாலும் காட்டுத் தீயின் பின்னேயுள்ள அரசியல் ஒன்றுதான்.

 
Continue Reading →about காட்டுத் தீயல்ல – பல்லுயிரியப் படுகொலை

பொது

பெரியாரின் தாடியைப் பிடித்து இழுத்தேன்

பெரியாரின் மடியில் அமர்ந்துள்ள குழந்தை யார் என்று தெரிகிறதா? ஆம், நானேதான். 1964-ல் எடுக்கப்பட்ட இப்புகைப்படத்தின் பின்னணியில் ஒரு சுவையான கதை உள்ளது.
 
Continue Reading →about பெரியாரின் தாடியைப் பிடித்து இழுத்தேன்

பொது

இந்தியை ஏன் மறுக்கிறோம்?

அமித்ஷா, ஒரு புதிய பெவிகால் பசையைக் கண்டுபிடித்துள்ளார். இந்தி என்கிற அந்தப் பசையைக் கொண்டு ஒட்டினால் இந்தியாவை ஒட்டிவிடலாம் என்பதே அவர் கண்டுபிடிப்பு. இதன் மூலம் அவர் இந்தியா இன்னும் ஒன்றுக்கொன்று ஒட்டாமல் துண்டுகளாகவே கிடக்கின்றன என்கிற உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.. அதற்காகவே அவரைப் பாராட்டலாம்.
 
Continue Reading →about இந்தியை ஏன் மறுக்கிறோம்?

பொது

நானும் ‘ரகு தாத்தா’ இந்தியும்

இந்திக் குறித்து அமித்ஷா சொன்னாலும் சொன்னார். நாடு முழுக்க அனல் பறக்கிறது. நானும் இந்திக் குறித்து ‘சீரியஸாக’ எவ்வளவோ எழுதிவிட்டேன். இருக்கும் உடல்நிலைக்கு இனி சினந்து எழுதுவதாக இல்லை. சிரிப்பு போலீசாக மாறினாலாவது ஏதாவது நடக்கிறதா என்று பார்க்க வேண்டும். தடம் பேட்டியில் காத்திரமாகப் பேசியதற்கு ஏற்ப ’சீரியஸ்’ முகபாவங்களுடன் படங்களைப் போட்டுவிட்டார்கள். அதெல்லாம் கடற்கரை வெளிச்சத்தில் கண்கள் கூசி எடுக்கப்பட்ட புகைப்படங்கள். எனக்கும் நகைச்சுவை வரும் என்பதை அனைவரும் நம்பவேண்டும். குறிப்பாக எனக்கும் இந்தி மொழிக்குமான உறவு இருக்கிறதே அதுவொரு சிறந்த ‘ரகு தாத்தா’ சிரிப்பு கதை.
 
Continue Reading →about நானும் ‘ரகு தாத்தா’ இந்தியும்

மனிதர்கள்

எழுத்து, கோட்டுக்குக் கொடுக்கும் மரியாதை

காடோடி பதிப்பக ‘லோகோ’ முகநூலில் வெளியானதும் பாராட்டுகள் குவிகின்றன. அத்தனைப் புகழும் ஓவியர் மணிவண்ணன் அவர்களுக்கே.
 
Continue Reading →about எழுத்து, கோட்டுக்குக் கொடுக்கும் மரியாதை

காடோடி பதிப்பகத்தின் புத்தகங்கள்